ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி
இயற்கையாகவே எனக்குப் பிடித்தமான உருவ அமைப்போடு இருக்கிற அபிமான நடிகையென்றாலும் இதற்கு இன்னொரு முக்கிய காரணமாக காக்க காக்க படத்தில் அவர் மீது படமாக்கப்பட்ட இந்தப் பாடல் இருக்கக் கூடும். பெண் வர்ணிப்பில் எப்போதுமே பாடலாசிரியர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் காட்டுவது இயல்பே ஆயினும், இந்தப் பாடல் அதில் சில உச்சங்களைத் தொட்டு விடுவதாகவே எனக்குத் தோன்றியது. குறிப்பாக பாடலாசிரியர் பெண் (தாமரை) என்கின்ற போது என் வியப்பு மேலும் பல்கிப் பெருகுகிறது.
ஒரு வேளை பெண் பாடலாசிரியர் என்பதால் தான் உருவ அமைப்பு பற்றி அதிகம் பேசாமல், 'அவள் பழகும் விதங்கள்', 'எதிலும் வாஞ்சைகள்', 'மரகத சோம்பல் முறித்தல்', புல்வெளி போல் சிலிர்த்தல்', 'விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் அழகு', 'ஏதோ அவளிடம் ஒரு தனித்துவம் ததும்பிடும்' என்று குணாதிசயத்தை மிகுதியாகப் பாடிச் செல்கிறது போலும் இந்தப் பாடல். போகிற போக்கில் என்னையும் கட்டிப் போட்டு இழுத்துச் செல்கிறது.
'ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாள்' என்று ஒரு கதை போல ஆரம்பிக்கும் முறையிலேயே என்னை ரசிக்க வைத்த பாடல் இது.
எப்படியிருந்தால் எனக்கென்ன, என் கதை/கவிதைகளுக்கு அழகான ஒரு நாயகி உருவம் கிடைத்தால் சரி. வேறென்ன எனக்குக் கவலை?
ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாளேஅதிருக்கட்டும், ஒரு பெண்ணே 'என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழியில்லையே' என்று அத்தனை தூரம் ஃபீலாகி எழுதுகின்ற அளவு அழகாக இருக்கும் ஜோ மீது நான் இப்படிக் கொஞ்சூண்டு அன்பாக இருப்பதற்கு என்மேல் ஏன் இத்தனை கோபம் பல பேருக்கு என்று தான் எனக்குப் புரிவதேயில்லை. :-) :-)
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருடப் பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..(2)
(ஒரு ஊரில்)
மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில் சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் - அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் - விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம்
ததும்பிடும் ததும்பிடுமே..
(ஒரு ஊரில்)
மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனியொரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய்த் திரும்பும்
அவள் கடந்திடும் போது - நிச்சயமாய்
தலை அனிச்சையாய் திரும்பும் - அவள் புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல
மொழியினில் வழி இல்லையே
(ஒரு ஊரில்)