எதிர்காலம் என்ற ஒன்று - வெ.சா. விமர்சனம்
இவ்வார திண்ணை இதழில் எதிர்காலம் என்ற ஒன்று என்ற அறிவியல் புனைகதைத் தொகுப்பு நூலுக்கு வெங்கட் சாமிநாதன் அவர்களின் விமர்சனம் இடம்பெற்றுள்ளது. மரத்தடி இணைய குழுமமும் திண்ணை இணைய இதழும் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் பங்குபெற்ற கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்று, எனி இந்தியன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதில் நான் போட்டிக்காக எழுதிய 'பால் பேதம்' என்ற சிறுகதையும் அடங்கும்.
அச்சிறுகதை பற்றி வெ.சா. அவர்கள், கீழ்வருமாறு கூறுகிறார்.
அவரது கருத்துக்கு எனது நன்றிகள்.
பால் மாற்றம் என்பது இன்றைய காலகட்டத்திலேயே சாத்தியமாகிவிட்டது என்ற அவரது கூற்று உண்மையே. என்றாலும் அது இன்னும் பூரண நிலையை (perfection) இன்னும் எட்டவில்லை என்று நான் நம்புகிறேன். சுமார் இருபது ஆண்டுகள் முன்னோக்கிய எதிர்காலத்தில் எனது கதை நடப்பதாகக் கற்பனை செய்து, அந்த காலகட்டத்தில், தந்தைக்கே ஆணாக மாறிய தன் பெண்ணை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு அதில் perfection எட்டப்படுகிறது என்று அமைத்திருக்கிறேன்.
திண்ணை, மரத்தடி, எனி இந்தியன் பதிப்பகம் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
அச்சிறுகதை பற்றி வெ.சா. அவர்கள், கீழ்வருமாறு கூறுகிறார்.
அறிவியல் கற்பனையோடு பெண்ணீயமும் கலந்தால் தீப்பொறி பறக்குமா, நகைச்சுவை உதிருமா? மீனாக்ஸ் எழுதியிருக்கும் பால்பேதம் கதையில் மிக ஆசையோடு வளர்த்த தன் மகள் பெண்ணை மதித்து நடக்கும் கணவனைத் தேடுகிறேன் என்று கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறாளே என்று வருந்தும் அப்பா பெண் வேலை செய்யும் ஊருக்குப் போகும் ரயிலில் ஒரு ஆண்மகனைப் பார்த்து பிடித்துப் போக, அந்த ஆண் மகனோ "அப்பா, என்னைத் தெரியவில்லையா, நான் தான் உங்கள் வசந்தி, இப்போது வசந்த் ஆகிவிட்டேன். பெண்களை மதிக்கும் ஒரு நல்ல மகனாக இருக்க விரும்பி ஆணாகிவிட்டேன்" என்கிறாள். பெண்ணீய பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு நல்ல முடிவு இருக்கிறது என்று சொல்கிறாரோ என்னவோ. இது அறிவியல் கற்பனை அல்ல. இன்றைய சாத்தியங்களில் பால் மாற்றமும் ஒன்று.
அவரது கருத்துக்கு எனது நன்றிகள்.
பால் மாற்றம் என்பது இன்றைய காலகட்டத்திலேயே சாத்தியமாகிவிட்டது என்ற அவரது கூற்று உண்மையே. என்றாலும் அது இன்னும் பூரண நிலையை (perfection) இன்னும் எட்டவில்லை என்று நான் நம்புகிறேன். சுமார் இருபது ஆண்டுகள் முன்னோக்கிய எதிர்காலத்தில் எனது கதை நடப்பதாகக் கற்பனை செய்து, அந்த காலகட்டத்தில், தந்தைக்கே ஆணாக மாறிய தன் பெண்ணை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு அதில் perfection எட்டப்படுகிறது என்று அமைத்திருக்கிறேன்.
திண்ணை, மரத்தடி, எனி இந்தியன் பதிப்பகம் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
1 Comments:
மீனாக்ஸ், இந்தப் பதிவுக்கும் தகவலுக்கும் நன்றி.
இது தொடர்பான என் பதிவு.
Post a Comment
<< Home