This Child is Me
நான் பெங்களூர் ஐ.ஐ.எம்.மில் படித்துக் கொண்டிருந்த போது வேறெங்கும் இல்லாத ஒரு புதிய course எங்களுக்கு வழங்கப்பட்டது. Tracking Creative Boundaries என்று அதற்குப் பெயர். (இது பற்றிய Financial Express பத்திரிக்கைச் செய்திக் கட்டுரை இங்கே.) கலை மற்றும் இலக்கியத்துறைகளில் மிகச் சிறந்த சிலரை வகுப்புக்கு அழைத்து வந்து எங்களோடு பேச வைத்து அவர்களின் படைப்புக்களை அலசி ஆராய்ந்து அதன் மூலம் மேலாண்மையில் சில புதிய பரிணாமங்களை எங்களுக்குக் காண்பிக்கின்ற ஒரு முயற்சி. என் வாழ்வில் நான் படித்த மிகச் சிறந்த course அது தான்.
அதில் ஒரு குறும்பட இயக்குனர் எங்களிடம் பேச வந்திருந்தார். பள்ளி செல்லும் பருவத்தில் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய மன நிலைகளைப் பற்றிய அவரது ஒரு குறும்படத்தையும் பார்த்து அது குறித்து விவாதித்தோம். அந்தப் படத்தைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதப் பணித்தார் எங்கள் பேராசிரியர்.
அந்தக் கட்டுரையில் பயன்படுத்துவதற்காக குழந்தையொன்றின் மனநிலையை அழகாகச் சொல்லுகின்ற கவிதையைத் தேடிய போது கிடைத்தது ஒரு ஹீப்ரூ மொழிக் கவிதை. யெஹுதா அட்லாஸ் என்பவர் எழுதியது. ஒரு சின்னக் குழந்தை தன் அம்மாவிடம் சொல்வதாக வரும் அந்தக் கவிதையின் தமிழாக்கம் இதோ:
"மற்றவர் முன்னிலையில் என் மேல் கோபம் கொள்ளாதே" என்று சொல்லும் அந்தக் குழந்தையின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல், சும்மா அலங்கரித்துக் குழந்தையைப் பிறர் வீட்டுக்கு அழைத்துப் போய் 'அங்கே போகாதே, அதைத் தொடாதே, ஓடிக்கொண்டிருக்காதே' என்றெல்லாம் சட்டமியற்றி ஒரே இடத்தில் உட்கார வைக்கும் பழக்கத்திற்கும் எதிர்ப்புக் காட்டுகிறது குழந்தை. எவ்வளவு ஆழமான உண்மை..!!

This Child is Meஎனக்கு ரொம்பப் பிடித்திருந்தது இந்தக் கவிதையும், அது சொல்லும் செய்தியும்.
நான் கேட்காத எதையும் எனக்கு விளக்காதே..
நான் விளையாடிக் கொண்டிருக்கையில்
என்னைக் கூப்பிடாதே..
அதிலும் நான் அப்போது தான்
ஆரம்பித்திருக்கிறேன் என்றால்..!
என்னை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதே..
நான் உனக்கு உதவலாம் என்று வரும்போது
"உன்னால் இது முடியாது" என்று சொல்லாதே..!
மற்றவர் முன்னிலையில்
என் மீது கோபம் கொள்ளாதே..!
அப்புறம் முக்கிமானது..
எனக்கு ஒன்றுமே செய்வதற்கு இல்லாத
பிறர் வீடுகளுக்கு
தயவு செய்து கூட்டிப் போகாதே..
நான் இங்கே என் பொம்மைகளோடே
இருந்து கொள்வேன்..!!
"மற்றவர் முன்னிலையில் என் மேல் கோபம் கொள்ளாதே" என்று சொல்லும் அந்தக் குழந்தையின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல், சும்மா அலங்கரித்துக் குழந்தையைப் பிறர் வீட்டுக்கு அழைத்துப் போய் 'அங்கே போகாதே, அதைத் தொடாதே, ஓடிக்கொண்டிருக்காதே' என்றெல்லாம் சட்டமியற்றி ஒரே இடத்தில் உட்கார வைக்கும் பழக்கத்திற்கும் எதிர்ப்புக் காட்டுகிறது குழந்தை. எவ்வளவு ஆழமான உண்மை..!!
5 Comments:
//நான் கேட்காத எதையும் எனக்கு விளக்காதே.//
//நான் உனக்கு உதவலாம் என்று வரும்போது
"உன்னால் இது முடியாது" என்று சொல்லாதே..!//
இவ்விரு வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது. முக்கியமாக இரண்டாவது..பிள்ளைகளுக்கு சில விஷயங்களில் implication (ஈடுப்பாடு??) இல்லாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது.
மீனாக்ஸ்,
விஷயமெல்லாம் நல்லா இருக்கு. ஆனா வலைப்பூவோட தலைப்பூ கொஞ்சம் இடிக்குது :-). கொஞ்சம் கவனிங்களேன்.
என் எழுத்தை நான் தவம் மாதிரி செய்கிறேன் என்று நினைத்து சொல்கிறீர்கள் என்றால் கொஞ்சம் அதிகப்படி :-).
-அதிகப்பிரசங்கி "மூக்கன்"
This comment has been removed by a blog administrator.
Dear mUkkan,
I considered what you suggested, but felt that i reserve the right to call the blog as it is. Thanks for your comments.
Please give more info about that creative course - what you did there etc
Post a Comment
<< Home