Monday, May 15, 2006

திருமண அழைப்பு

How Meenaks Gets Blessed, Gets Mild, and Gets a Wife..!!

அன்பு நிறைந்த வலைப்பதிவு நண்பர்களுக்கு,

உங்கள் அனைவரையும் எனது திருமண நிகழ்ச்சிக்கு இந்தப் பதிவு மூலம் அழைப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். திருமணம் மதுரை நகரிலும், வரவேற்பு சென்னை மாநகரிலும் நடைபெற இருக்கிறது. அன்பர்கள் தங்கள் குடும்ப சகிதம் பெருமளவில் வந்திருந்து இரு விழாக்களிலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

திருமண அழைப்பிதழை scan செய்து எனது திருமணத்திற்கான வலைப்பக்கம் ஒன்றில் இணைத்திருக்கிறேன். அவசியம் பார்வையிடவும். கடந்த சில ஆண்டுகளாக கோவில்களுக்குச் செல்லும் போது அங்குள்ள கடைகளில் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கிச் சேமித்தல் எனது பழக்கம். என்னிடமுள்ள வித்தியாசமான விநாயகர் சிலைகளின் நிழற்படங்கள் சிலவற்றையும் அவ்வலைப்பக்கத்தில் இணைத்துள்ளேன்.

திருமணம்:
07/ஜூன்/2006, புதன்கிழமை
காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள்
ஸ்டார் பார்க் திருமண மண்டபம்,
அண்ணா நகர், மதுரை - 625020
(சினிப்ரியா திரையரங்கம் அருகில்)

வரவேற்பு:
17/ஜூன்/2006, சனிக்கிழமை
மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை
திருவள்ளுவர் திருமண மாளிகை,
பெரியார் நகர், சென்னை - 600082

பேருந்து தட எண்கள்: 8A, 29, 29L, 42
(அனைத்துப் பேருந்துகளும் பெரியார் நகர் பேருந்து நிலையம் செல்பவை)
பேருந்து நிறுத்தம் - திருவள்ளுவர் திருமண மாளிகை

புறநகர் இரயில் நிலையம்: பெரம்பூர் லோக்கோ வொர்க்ஸ் (Perambur Loco Works)
(செண்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம்/திருவள்ளூர் மார்க்கம்)
இரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் மண்டபம்

Self driving-க்கான உத்தேச வழி:
அண்ணா சாலை - நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை - சேத்துப்பட்டு - கெல்லீஸ் - அயனாவரம் - பெரம்பூர் - அகரம் - பெரியார் நகர்

அனைவரையும் அழைக்கிறேன். வருக, வாழ்த்துகள் தருக.

50 Comments:

Blogger நன்மனம் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள். இனிய இல்லறம் அமைய இறையருள் வேண்டும் நண்பன்.

May 15, 2006 4:05 AM  
Blogger Gokul Kumar said...

வாழ்த்துக்கள் மீனாக்ஸ் சென்னை வர வேண்டிய வேலை இருக்கு வந்தா கண்டிப்பா வரேன்

May 15, 2006 4:18 AM  
Blogger ப்ரியன் said...

வாழ்த்துக்கள் மீனாக்ஸ்

May 15, 2006 4:20 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy) said...

Congratulations Meenaks. Convey my regards to Subha.

-Mathy

Abt Pillaiyar - nice collection. Have you ever been to 'Lucky Ganesha Giftshop' in Alsa Mall. I love the glass Ganeshas. Mr. Santhosh makes lovely pillaiyars. They used to have pillaiyar made from other materials too. Do checkout the store if you havent.

quite disclaimer: first visited the store around 90-91. my last visit was in 2000. so the store maynot be there too.

May 15, 2006 4:27 AM  
Blogger முத்துகுமரன் said...

திருமண முன் வாழ்த்துகள் நண்பரே...

மண விழா இனிதே நடைபெற வாழ்த்துகளும் பிராத்தனைகளும்...

May 15, 2006 4:31 AM  
Blogger ராம்கி said...

All the Best! :-)

May 15, 2006 5:19 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

வாழ்த்திய நட்புள்ளங்களுக்கு எனது நன்றிகள். நிகழ்ச்சிகளுக்கு வர முடிந்தால் மிகவும் மகிழ்வேன்.

மதி, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடைக்கு அவசியம் செல்கிறேன்.

May 15, 2006 5:29 AM  
Blogger முத்து(தமிழினி) said...

வாழ்த்துக்கள் மீனாக்ஸ்


அன்புடன்

முத்து
(சென்னையில் பார்த்தோமே)

May 15, 2006 6:05 AM  
Anonymous Vignesh said...

Hearty Congrats..

Tht googlepage looks so cool..

-- Vignesh

May 15, 2006 6:06 AM  
Blogger மணியன் said...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட முன்கூட்டியே வாழ்த்துக்கள் மீனாக்ஸ் !!

May 15, 2006 6:19 AM  
Blogger சிவமுருகன் said...

என்மனமார்ந்த வாழ்த்துக்கள் மீனாக்ஸ்.

May 15, 2006 6:26 AM  
Blogger SK said...

Advance congratulations for a happy wedded life!
Will re-visit on June 7th also to wish you again!!

May 15, 2006 6:31 AM  
Blogger கொங்கு ராசா said...

வாழ்த்துக்கள்!!

May 15, 2006 6:46 AM  
Anonymous கீதா said...

வாழ்த்துக்கள்

&

புதியதொரு உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் :)

கீதா

May 15, 2006 6:54 AM  
Blogger சிங். செயகுமார். said...

மீனாக்ஸ் - சுபா தம்பதியருக்கு என் இனிய திருமண வாழ்த்துக்கள்.

May 15, 2006 7:13 AM  
Blogger நாகை சிவா said...

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறு ஆண்டு
எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க.
திருமணம் இனிதே நடைப்பெற இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்

May 15, 2006 8:21 AM  
Blogger பத்மா அர்விந்த் said...

மகிழ்ச்சியும் வளமும் பெருக உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்

May 15, 2006 2:35 PM  
Blogger Karthik Jayanth said...

மீனாக்ஸ்,

மனமார்ந்த வாழ்த்துக்கள்..

கல்யாண மண்டபத்துல (ஸ்டார் பார்க் திருமண மண்டபம்) இருந்து 5 நிமிசம் நடந்து போற தூரத்துலதான் எங்க வீடு இருக்கு..

சும்மா வீட்டு ஞாயபகம் :-)

May 15, 2006 4:21 PM  
Blogger நந்தன் | Nandhan said...

meenaks, வாழ்த்துக்கள். வரேன் :)
பெரியார் நகர் நம்ம ஏரியாவாச்சே, மண்டபத்துல இருந்து 5 நிமிட நடை என் வீடு! நானும் அடுத்த மாசம் இந்தியாவுக்கு வரேன்.
கல்யாணத்துக்கு வரவுங்க ஒரு எட்டு பார்த்துட்டு போலாம் :)

May 15, 2006 5:34 PM  
Blogger துளசி கோபால் said...

மீனாக்ஸ் & சுபா,

ரொம்ப சந்தோஷம். எல்லா நலன்களும் பெற்று மனமகிழ்வோட வாழணும். வாழ்வீங்க.
ரெண்டு பேரும் நல்லா இருங்க. மனமார வாழ்த்துகின்றோம்.
என்றும் அன்புடன்,
கோபால் & துளசி.


நானும் புள்ளையார், யானைன்னு ரெண்டையும் சேர்த்துக்கிட்டு வர்றேன். கிட்டத்தட்ட
150 இருக்கு.
படமா எடுத்துப் போடறது நல்ல ஐடியாவா இருக்கே. விடப்போறதில்லை:-))))

May 15, 2006 6:25 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி
சவுதி அரேபியா

May 15, 2006 9:38 PM  
Blogger இளவஞ்சி said...

மீனாக்ஸ்,

மனக்கனிந்த உளப்பூர்வமான திருமண வாழ்த்துக்கள்!

கல்யாணத்துக்கு தலைக்கறி விருந்து உண்டா?! :)))

May 15, 2006 10:35 PM  
Blogger வெற்றி said...

தங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்.

May 15, 2006 10:51 PM  
Blogger செல்வநாயகி said...

உங்கள் இருவருக்கும் மகிழ்வும், மனநிறைவும்தரும் மணவாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!

May 15, 2006 11:10 PM  
Blogger சுதர்சன்.கோபால் said...

தம்பதியருக்கு என் இனிய திருமண வாழ்த்துக்கள்...

May 15, 2006 11:31 PM  
Blogger ramachandranusha said...

மீனாக்ஸ்,
மனக்கனிந்த திருமண வாழ்த்துக்கள்!

May 15, 2006 11:49 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

வாழ்த்திய அனைவருக்கும் என் சார்பிலும் சுபா சார்பிலும் நன்றிகள்.

//கீதா said...
புதியதொரு உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் :)//

நன்றி கீதா. கண்ணுக்குத் தெரியாத அந்த உலகத்தை நினைச்சா பயமா இருக்கு.

கார்த்திக் ஜெயந்த், திருமணத்தின் போது மதுரையில் இருக்க வாய்ப்புண்டா?

நந்தன், அட, நீங்களும் நம்ம ஏரியா தானா? அவசியம் வாங்க.

துளசி மேடம், உங்க கிட்ட 150 இருக்கா? என் கிட்ட நூறு தான். சீக்கிரம் படமாப் போடுங்க.

இளவஞ்சி, திருமணத்துக்கு தலக்கறி விருந்து கேட்டா, அப்புறம் நம்ம தலைய விருந்து வச்சிடுவாங்க. அதெல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்குத் தான்.

May 16, 2006 12:13 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Transferred from Haloscan comments
Posted by: Govikannan

//உங்கள் அனைவரையும் எனது திருமண நிகழ்ச்சிக்கு இந்தப் பதிவு மூலம் அழைப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.//
பதினாறும் பெற்று, பதிவும் பின்னூட்டமாக பெறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள்
கோவி,கண்ணன்,
சிங்கை
05.15.06 - 7:07 am

May 16, 2006 12:17 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Transferred from Haloscan comments
Posted by: Paranjothi

வாழ்த்துகள், பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
05.15.06 - 7:44 am

May 16, 2006 12:18 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Transferred from Haloscan comments
Posted by: Thiru

'மதுரை மருமகன்கள்' சங்கத்தின் புதிய உறுப்பினரே... வருக..வருக..! நல்வாழ்த்துக்கள்.

- திரு.
உறுப்பினர் எண்: 117
உறுப்பினர் ஜூன் - 8 - 2005 முதல்.

("தோ..சாம்பார் 2 நிமிசத்தில ரெடியாய்டும்மா!.. கொஞ்சம் பொறுத்துக்கோ..!").

கடமை அழைப்பதால்......,
நல்வாழ்த்துக்கள், மீனாக்ஸ்..!

திரு | 05.15.06 - 11:13 am

May 16, 2006 12:19 AM  
Blogger பட்டணத்து ராசா said...

வாழ்த்துகள்

May 16, 2006 12:23 AM  
Blogger Thangavel said...

வாழ்துக்கள் மீனாக்ஸ்,

பெரியார் நகரிலிருந்து (கல்யாண மண்டபத்திற்கு பின்புறமுள்ள தெரு) இரண்டு மாதம் முன்புதான் வீட்டை காலிசெய்துவிட்டு தேனாம்பேட்டை வந்துவிட்டேன். எனினும் வரவேற்பிற்கு வர முயற்சிக்கிறேன்.

May 16, 2006 12:32 AM  
Blogger செந்தில் குமார் இராமச்சந்திரன் / Senthil Kumar Ramachandran said...

வாழ்த்துக்கள் மீனாக்ஸ்

May 16, 2006 1:56 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் மீனாக்ஸ் &சுபா!!! அனைத்து வளமும் பெற்று வாழ்க!!!

...aadhi

May 16, 2006 6:13 AM  
Blogger கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

வாழ்த்துகள் நண்பரே

May 16, 2006 6:26 AM  
Blogger காசி (Kasi) said...

எல்லா வளமும் பெற்று வாழ மனமார வாழ்த்துகிறேன்.

May 16, 2006 6:27 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

அன்பு நிறை மீனாக்ஸ்

மனபூர்வமான திருமண வாழ்த்துகள்.
எங்கள் மயிலாடுதுறை சார்பாக எங்கள் வலைபதிவு
நண்பர் திரு மூக்கு சுந்தர் உங்களை நேரில் வாழ்த்துவார்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

May 16, 2006 6:45 AM  
Anonymous Anonymous said...

Wish you a happy married life Meenaks!!!

--
Jagan

May 17, 2006 4:45 AM  
Blogger sivagnanamji(#16342789) said...

எல்லா வளங்களும்
இனிதே நிறைந்திடுக!
வாழ்க! வளர்க!!

May 18, 2006 12:40 AM  
Blogger முகமூடி said...

பதினாறு பேரும் அளவான குழந்தைகளும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

May 18, 2006 9:04 AM  
Blogger தேவ் | Dev said...

வாழ்த்துக்கள் மீனாக்ஸ்

May 30, 2006 3:13 AM  
Blogger நிலவு நண்பன் said...

வாழ்த்துக்கள் நண்பரே

மனைவி குழந்தைகள் வலைப்பதிவுகள் என்று வாழ்க்கை வளமாய் சிறக்கட்டும்..

May 30, 2006 8:27 AM  
Blogger Dharumi said...

வாழ்த்துக்கள்

May 30, 2006 9:29 AM  
Blogger செந்தில் குமரன் said...

உங்கள் இல்லறம் நல்லறமாகி அனைத்து நலன்களும் பெற வேண்டும். வாழ்த்துக்கள்.

May 31, 2006 3:50 AM  
Anonymous johan -paris said...

வாழ்க! வளமுடன்!
வாழ்த்தட்டை ஒன்று! மண்டப விலாசத்துக்குப் போட்டுவிடட்டுமா????
யோகன் -பாரிஸ்

May 31, 2006 4:12 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

வாழ்த்திய அனைவருக்கும் என் சார்பிலும் சுபா சார்பிலும் நன்றிகள்.

//johan -paris said...
வாழ்க! வளமுடன்!
வாழ்த்தட்டை ஒன்று! மண்டப விலாசத்துக்குப் போட்டுவிடட்டுமா????//

யோகன், மண்டபத்தில் 6ம் தேதி மாலை முதல் 7ம் தேதி பிற்பகல் வரை இருப்போம் என்று கருதுகிறேன்.

May 31, 2006 11:54 PM  
Blogger லக்கிலுக் said...

மாட்டிக்கிட்டிங்களா மீனாக்ஸ்....

வருத்தமில்லா வாலிபர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!!!!

June 01, 2006 12:01 AM  
Blogger appan ganapathy said...

dear naNbA,

maNa vAzhkkai inimaiyay irukka nal vAZhththukkaL.

June 05, 2006 4:24 AM  
Blogger டண்டணக்கா said...

வாழ்த்துக்கள்.

June 19, 2006 11:40 AM  
Anonymous Anonymous said...

முதலமாண்டு மண நாள் வாழ்த்துக்கள் மீனாக்ஸ்!!!.பழைய பதிவுகளைப் படித்து கொண்டிருந்த போது தற்செயலாக உங்கள் திருமண அழைப்பிதழ் பதிவையும் பார்த்தேன். அட இன்று ஜுன் 7. எல்லா வளமும் பெற்று வாழ்க !!!

..Aadhi

June 07, 2007 7:48 AM  

Post a Comment

<< Home