ஷெல்லி என்றொரு கவிஞன்
ஆங்கிலத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு கவிஞன் ஷெல்லி. பெர்ஸி பிஸ்ஸெ ஷெல்லி. (Percy Bysshe Shelley, 1792-1822) முப்பது வயதில் நாம் அவனை இழந்தது மிகுந்த துர்ப்பாக்கியமானது. ஷெல்லியை நான் முதலில் படித்தது பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில். ஓஸிமாண்டியஸ் (Ozymandias) என்பது கவிதையின் தலைப்பு.
சக கவிஞன் ஜான் கீட்ஸ் (John Keats) இறந்த போது ஷெல்லி எழுதிய Adonais என்ற (சற்றே நீளமான) இரங்கற்பா மிகவும் பிரபலமானது, துயரம் மிக்கது.
நிலமுடைய பெருங்குடியில் பிறந்திருந்தாலும், சமூக அக்கறை மிக்கவனாக வாழ்ந்தான் ஷெல்லி. அதனாலேயே வீட்டிலிருந்தும், பிறகு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும் விலக்கப்பட்டான். அவனது நெடுங்கவிதைகள் பலவற்றில் இத்தகைய புரட்சிக் கருத்துக்கள் மிளிர்கின்றன. உங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஷெல்லியைப் படித்துப் பாருங்கள். உள்ளொளியை ஏற்றவல்லது அவன் எழுத்து.
I met a traveller from an antique landஎன் ஆங்கில ஆசிரியர் பொருளை விளக்க விளக்க எனக்கு உலகமே மறந்து போனது போலானது. மனித வாழ்வின் நிலையாமையை அழகாகச் சொல்லியிருந்தான் ஷெல்லி. எத்தனை மகத்தான மன்னர்மன்னனாக இருந்தாலும் கடைசியில் அவனது வெற்றிகள் மண்ணோடு மண்ணாகிப் போன காட்சி எனக்குள் நுண்ணிய அதிர்வுகளைத் தந்தது. குறிப்பாக, உடலற்ற இரு கால்கள் நிற்பதும், பக்கத்தில் மண்ணில் அமிழ்ந்து பாதி மட்டுமே வெளியே தெரியும் அந்த முகம், அதன் உதடுகளில் ஒரு எக்காளம் என்று வரிசையாக வர்ணித்து விட்டு, இறுதியாக ஷெல்லி கொடுக்கும் க்ளைமாக்ஸ் பட்டையைக் கிளப்புகிறது.
Who said: Two vast and trunkless legs of stone
Stand in the desert ... Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things,
That hand that mocked them and the heart that fed;
And on the pedestal these words appear:
"My name is OZYMANDIAS, king of kings:
Look on my works, ye Mighty, and despair!"
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck, boundless and bare
The lone and level sands stretch far away.
சக கவிஞன் ஜான் கீட்ஸ் (John Keats) இறந்த போது ஷெல்லி எழுதிய Adonais என்ற (சற்றே நீளமான) இரங்கற்பா மிகவும் பிரபலமானது, துயரம் மிக்கது.
நிலமுடைய பெருங்குடியில் பிறந்திருந்தாலும், சமூக அக்கறை மிக்கவனாக வாழ்ந்தான் ஷெல்லி. அதனாலேயே வீட்டிலிருந்தும், பிறகு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும் விலக்கப்பட்டான். அவனது நெடுங்கவிதைகள் பலவற்றில் இத்தகைய புரட்சிக் கருத்துக்கள் மிளிர்கின்றன. உங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஷெல்லியைப் படித்துப் பாருங்கள். உள்ளொளியை ஏற்றவல்லது அவன் எழுத்து.
0 Comments:
Post a Comment
<< Home