Wednesday, March 15, 2006

மூணு + ஒண்ணு = நாலு

பாஸ்டன் பாலாஜி ஒண்ணும் என் பேரைச் சொல்லிக் கூப்பிடலை. பொதுவாத் தான் சொன்னாரு. இருந்தாலும் நானும் இந்த வலைப்பதிவைக் கண்டுக்காம விட்டு பல நாள் ஆகிடுச்சா, அதான் இதை எழுதியாவது அடுத்த ரவுண்டு இஸ்டார்ட் பண்ணலாம்னு...

நான் பார்த்த நான்கு வேலைகள்:

1. Customer Service Engineer (Medical Equipment - CT/MRI Scanners)
2. Assistant Manager - Product Development (Life Insurance)
3. Senior Business Analyst (Information Technology)
4. Student Chairman of Department Association

நான் வசித்த நான்கு இடங்கள்:

1. ஸ்பிக் நகர், தூத்துக்குடி
2. சிங்காரச் சென்னை
3. பெங்களூரு
4. மதுரை (வசிக்கவில்லையென்றாலும் பிடித்த ஊர்)

நான் பார்க்கச் சலிக்காத நான்கு திரைப்படங்கள்:

1. காதலிக்க நேரமில்லை
2. தில்லு முல்லு
3. காக்க காக்க (ஜோ ஜோ ஜோ ஜோதிகா..!!)
4. Sholay

நான் ரசித்துப் பார்க்கும் நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:

1. லொள்ளு சபா (சந்தானம் இருந்த வரை) - விஜய் டிவி
2. கலக்கப் போவது யாரு - விஜய் டிவி
3. Just for Laughs Gags - POGO
4. F.R.I.E.N.D.S.

நான் விடுமுறைக்குச் சென்ற நான்கு இடங்கள்:

1. ஹரித்வார்/ரிஷிகேஷ்
2. பாங்காக், தாய்லாந்து
3. கோவா
4. (சிறு வயதில்) பாட்டி வீடு

நான் விரும்பும் நான்கு உணவு வகைகள்:

1. பிரியாணி (The Biryani Merchant, Bangalore)
2. 'Death By Chocolate' ice cream (Corner House, Bangalore)
3. கேசரி, பொங்கல், வடை
4. கைக்கு ஒன்றாக குச்சி ஐஸ்

நான் தினமும் பார்வையிடும் நான்கு இணையதளங்கள்:

1. தமிழ்மணம்
2. Cricinfo
3. Mugglenet
4. BlogLines

நான் தற்போது இருக்க விரும்பும் நான்கு இடங்கள்:

1, 2, 3, 4. கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற பையன் கிட்ட என்ன கேள்வி இது? எல்லாம் 'அவங்க' பக்கத்தில தான் :-))

-o0o-

நானே ஓசி காஜி. நான் எங்கே நாலு பேரை அழைப்பது?

9 Comments:

Blogger ஜெ. ராம்கி said...

கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற பையன் கிட்ட என்ன கேள்வி இது? எல்லாம் 'அவங்க' பக்கத்தில தான் :-))

டமால்! வெடித்தது இதயம். கலங்கியது கண்கள்.

அந்த நாள் நாபகம் வந்துச்சுப்பா! :-)

March 15, 2006 2:49 AM  
Blogger Geetha Sambasivam said...

CONGRATULATIONS.

March 15, 2006 2:53 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//1, 2, 3, 4. கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற பையன் கிட்ட என்ன கேள்வி இது? எல்லாம் 'அவங்க' பக்கத்தில தான் :-))//

வாழ்த்துக்கள். :)

இன்னொரு விஷயம். உங்க தமிழ்மண பட்டையின் இரண்டாம் பாகத்தின் நிரலியை ஒரு வரி கீழிறக்கி < / h3 > என்பதன் கீழ் ஒட்டினீர்களானால் பட்டையின் அளவு சரியாக வரும்.

March 15, 2006 3:48 AM  
Blogger G.Ragavan said...

ஓசியோ பாசியோ....அதுக்காக பின்னூட்டம் போடாம இருக்க முடியுமா! இதோ...பின்னூட்டம்.

தூத்துக்குடிக்காரரா? சொல்லவேயில்லை...(எப்பக் கேட்டேன்னு கேக்காதீங்க)

பிரியாணி மெர்ச்செண்ட்ல பிரியாணி நல்லாருக்கா என்ன....ஒருவாட்டி வாங்கினேன்...அவ்வளவு சுகமா இல்லை. ஹைதராபாத் ஹவுஸ் போய்ப் பாருங்கள். நன்றாக இருக்கும்.

DBC உங்களுக்குப் பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும். ஆனால் முழுதாகச் சாப்பிட முடியாது. ரொம்பவே ஹெவி. எக்கச்சக்கமாக சாக்லேட். அதுனால sharing இல்லைன்னா நான் DBC வாங்கவே மாட்டேன். Banana Split தான்.

தில்லு முல்லு எனக்கும் ரொம்பப் பிடித்த படம். படம் முழுக்க சிரிப்பு வெடிகள். அதிலும் சௌகார் ஜானகியின் கலக்கல்களைச் சொல்லவும் வேண்டுமா!

mugglenet தெனமும் பாப்பீங்களா....நான் இப்பல்லாம் அந்தப் பக்கம் நெறைய போறதில்லை. நேரமில்லைங்க....

March 15, 2006 4:53 AM  
Blogger Chenthil said...

You were in Spic Nagar? My dad was there from 1973-81 so I started my schooling there. Again I went to SPIC as an Engineer and worked there from 1996-2000. It is a small world.

March 15, 2006 4:53 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Chenthil,

I was born in 1978 and started schooling in 1981, so I would have missed you.. Still good to know that you had been there. And you worked there too? I still go there to visit my uncle's house. He works in TAC. My father might know your dad, may be you could mail me about it.

March 17, 2006 2:04 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

இலவசக்கொத்தனார், ரொம்ப நன்றி, நீங்க சொல்றது மாதிரி மாத்திடறேன்.

March 17, 2006 2:05 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

G.Ragavan, I was a regular customer at The Biriyani Merchant. Did you take a parcel or have it in the restaurant. Because they give with two types of kuruma, date pickles and appalam. I like it very much.

DBC ஹெவி தான் இருந்தாலும் நல்ல டேஸ்ட். அடுத்தபடியா எனக்குப் பிடிச்சது Cake Fudge.

Mugglenet-ல நிறைய editorials எழுதறாங்களே. புதுசு புதுசா நிறைய analyse பண்ணி எழுதறதால ஆர்வமாப் படிக்கிறதுண்டு. எக்கச்சக்கமான தியரி ஓடுது. நேரம் கிடைச்சா படிச்சுப் பாருங்க. Snape நல்லவரா, கெட்டவராங்கிற ஒரு சப்ஜெக்டே மண்டை காய வைக்குது.

March 17, 2006 2:09 AM  
Blogger கைப்புள்ள said...

//1, 2, 3, 4. கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற பையன் கிட்ட என்ன கேள்வி இது? எல்லாம் 'அவங்க' பக்கத்தில தான் :-))//

வாழ்த்துகள் மீனாக்ஸ். மரத்தடியில் உங்களுடைய படைப்புகள் சிலவற்றைப் படித்துள்ளேன். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக student reunion சம்பந்தப்பட்ட ஒரு கதை நினைவில் நிற்கிறது.

March 17, 2006 4:54 AM  

Post a Comment

<< Home