Wednesday, March 15, 2006

சொந்தக் கதை

க்ருபாவைத் தொடர்ந்து நானும்...

21-Jan-2006

வந்தாள், கண்டாள், வென்றாள்

(அல்லது)

போனேன், பார்த்தேன், பூத்தேன்

உன் மேல் கவிந்திருக்கும்
மௌனத்தின் நீர்நிலை மேல்
பார்வைகளால் கல்லெறிகிறேன் நான்.
ஒற்றை வளையமாய்
ஒரு புன்னகையைத் தோற்றுவித்து
உன்னுள்ளே மூழ்கடிக்கிறாய் நீ.

என் முன்கதைச் சுருக்கத்தை
உன் காதருகே
உலவ விடுகிறேன் நான்.
நாம் இருவருக்கான எதிர்காலக் கனவை
அறையின் கூரையெங்கும்
பரவ விடுகிறாய் நீ.

நான் எழுதியிருக்கும்
கவிதைகள் பிடிக்குமென்கிறாய் நீ.
என் எதிரிலிருக்கும்
கவிதையைப் பிடிக்குமென்கிறேன் நான்.

உன் எதிர்பார்ப்புகளின் தவிப்பும்
என் விருப்பங்களின் இருப்பும்
நேர்கோட்டில் சந்திக்கின்றன.

என் கற்பனைகள் ஒவ்வொன்றும்
உன் கண்களில்
தத்தம் முகம் பார்த்துக் கொள்கின்றன.

உன் குறும்புப் பார்வைகள்
என் மீசையைப்
பிடித்திழுத்து விளையாடுகின்றன.

இதுவரை
தனித்தனியே
தேடிக் கொண்டிருந்த
நமக்கான பிரபஞ்ச முடிச்சை
சேர்ந்து கண்டுகொண்ட பரவசத்தில்
மிதக்கிறோம் நாம்.

சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும்,
சில தினங்களுக்குப் பிறகும்,
என் காதுகளில்
இன்னும் ஒலித்தபடியே இருக்கிறது,
என்னைப் பிடித்திருப்பது பற்றிய
எனது கேள்விக்கு
நீ பதிலாய்த் தந்த
ஒரு சொல்,
ஓர் எழுத்து,
ஓர் ஓசை,
"ம்..!"

25 Comments:

Blogger -/பெயரிலி. said...

வாழ்க, வளர்க

March 15, 2006 11:14 PM  
Blogger Pavals said...

வாழ்க வளமுடன்..!

March 15, 2006 11:35 PM  
Blogger முகமூடி said...

வாழ்த்துக்கள்... இனி வலைப்பதிவுல இருந்து ரொம்ப நாள் காணாம போயிடுவீங்கன்னு சொல்லுங்க..

March 15, 2006 11:49 PM  
Blogger ilavanji said...

மீனாக்ஸ்,

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

:)

March 16, 2006 12:08 AM  
Anonymous Anonymous said...

வாழ்க வளமுடன்.

March 16, 2006 1:56 AM  
Blogger பத்மா அர்விந்த் said...

இனிமையான எதிர்காலத்திற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். அழகான புகைப்படம்

March 16, 2006 2:41 AM  
Blogger வானம்பாடி said...

வாழ்த்துகள்!

March 16, 2006 2:58 AM  
Blogger Boston Bala said...

பல்லாண்டு வாழ்க மீனாக்ஸ் :-) (ப்ரைவசிக்கு கவலைப்படும் காலம்... போட்டோவை கொஞ்ச நாள் கழிச்சு எடுத்துடுங்க?)

March 16, 2006 9:33 AM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் மீனாக்ஸ்!

March 16, 2006 11:19 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

March 16, 2006 12:11 PM  
Blogger தங்ஸ் said...

Vazthukkal Meenaks!

March 16, 2006 2:55 PM  
Blogger Mookku Sundar said...

//The Shy Bride and the Shameless Groom..!! //

:-)

வாழ்த்துக்கள் கவிஞரே...!!

இப்பவே "களை" அடிக்க ஆரமிச்சிடுச்சு.
கல்யாணம் எப்போ..?? மே 21 ல் இருந்து ஜூன் 16 வரை இந்தியாவில் இருப்பேன். அப்போது இருக்குமா..??

March 16, 2006 4:16 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

// Mookku Sundar said...
இப்பவே "களை" அடிக்க ஆரமிச்சிடுச்சு. கல்யாணம் எப்போ..??//

சுந்தர், கல்யாணம் ஜூன் 7 அன்று காலை மதுரை நகரில் நடைபெறும். முடிந்தால் அவசியம் வரவும்.

சிவனடியார், கவிதை வாழ்த்துக்கு நன்றி.

March 16, 2006 8:05 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

அனைவருக்கும் நன்றிகள்.

முகமூடி சார், இவ்வளவு நாள் தான் செட்டில் ஆகிறதுக்காக காணாமப் போயிருந்தேன். இனிமே என்ன?

March 17, 2006 1:58 AM  
Blogger இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும்!

March 17, 2006 6:29 AM  
Blogger BZ said...

Wow Senior!
Congratulations!! :)
Best wishes.

March 23, 2006 7:31 PM  
Blogger Vassan said...

உளங்கனிந்த நல்வாழ்த்துகள்...

March 23, 2006 8:38 PM  
Blogger Karthik Jayanth said...

மீனாக்ஸ்,

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

//The Shy Bride and the Shameless Groom..!! //

:-)

March 24, 2006 7:27 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Thanks for the wishes.

Saranya Kishore, I am intrigued by why you address me as "Senior". Could you mail me?

March 26, 2006 8:33 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Best wishes to both of you.

March 26, 2006 10:15 PM  
Blogger துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்துகள் மீனாக்ஸ். நல்லா இருங்க.
கல்யாணம் மதுரையிலா? ஜமாய்ச்சுரலாம்.
ஆமா, பொண்ணு கட்டியிருக்கற பொடவை என்ன கலர்னு சரியாத் தெரியலையேப்பா?:-)

March 26, 2006 10:25 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

துளசி மேடம், ரொம்ப நன்றிங்க. பொண்ணு பொடவை மெரூன் கலர் பட்டு with ஆரஞ்சு கலர் காண்ட்ராஸ்ட் பார்டர்.

March 27, 2006 2:37 AM  
Blogger சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் நண்பரே மீனாக்ஸ்!

March 27, 2006 5:30 AM  
Blogger துளசி கோபால் said...

'தகவலுக்கு' நன்றி மீனாக்ஸ்.

நல்ல அழகா இருக்காங்க. அந்த நாணம் கலந்த சிரிப்பு சூப்பர் போங்க.
நல்லா இருங்க ரெண்டு பேரும்.

என்றும் அன்புடன்,
துளசி

March 27, 2006 1:09 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

மனம் நிறைந்த வாழ்வுக்கு வாழ்த்துக்கள்..

April 18, 2006 12:08 AM  

Post a Comment

<< Home