Saturday, July 16, 2005

ஹாரி பாட்டரும், அரை-ரத்த இளவரசனும் (Harry Potter and the Half-Blood Prince)

பெங்களூரின் க்ராஸ்வேர்ட் (Crossword) புத்தகக் கடையில் எனது ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு முன் பணம் செலுத்தி வைத்திருந்தேன். சனிக்கிழமை ரிலீஸ். வெள்ளிக்கிழமை காலையில் கடைக்குத் தொலைபேசி, கடையை மறு நாள் எப்போது திறப்பீர்கள் என்று விசாரித்த போது, "ஆறு மணிக்குத் திறந்துடுவோம்" என்று கூறி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தனர்.சனிக்கிழமை காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து, (அது சரி, சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸாகிற தியேட்டர் மட்டும் தான் நமக்குக் கோயிலா என்ன? இந்த மாதிரி புத்தகம் ரிலீஸாகிற கடையும் நமக்குக் கோயில் தான்!!) ஆறு மணிக்கெல்லாம் கடை வாசலுக்குப் போய் விட்டேன். குட்டிக்குட்டியாய் பல சுட்டிப் பயல்களும் பெண்களும் தங்கள் பெற்றோருடன் வாசலில் க்யூவில் இருந்தனர். எல்லோர் முகத்திலும் பரபரப்பு. அந்தப் பரபரப்பை அதிகப் படுத்தும் விதமாகக் கடை வாசலில் ஒரு போர்டு. 'இந்திய விநியோகஸ்தர்களின் விருப்பப்படி, நாடெங்கிலும் புத்தக விற்பனை 6:30 மணிக்குத் துவங்கும்'. பல சுட்டிகள் கடை வாசலில் நின்றிருந்த பணியாளர்களிடம் சூடாக இதை எதிர்த்து விவாதம் செய்து கொண்டிருந்தனர். பின்னே? நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ஐந்து மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விட்டவர்களாம், வேறென்ன செய்வார்கள்?

"இந்தியன் ஸ்டான்டர்ட் டைம்னாலே எப்பவும் லேட் தானா?", "எதுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து பசங்களை விட நாங்க மட்டும் லேட்டாப் படிக்க ஆரம்பிக்கணும்?", "பரவாயில்லடா, விடு, அமெரிக்காவில சீக்கிரம் விக்க ஆரம்பிச்சாலும், நம்மள மாதிரி ஸ்பீடாப் படிக்க அவனுங்களுக்கு வராது.. கொஞ்ச நேரம் படிச்சுட்டு, படமா வரட்டும் பார்த்துக்கலாம்னு விட்டிருவானுங்க.. நாம தான் முதல்ல படிச்சு முடிப்போம்." போன்ற வசனங்களைக் காதாரக் கெட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், "உள்ளே வந்து நிக்கலாம், ஆனா முதல் புத்தகம் ஆறரை மணிக்குத் தான் விக்க ஆரம்பிப்போம்" என்று கடைப் பணியாளர்கள் சமரசத்திற்கு இறங்கி வந்தனர். அந்த மட்டில் போதுமென்று எல்லோரும் உள்ளே படையெடுத்தோம். அதற்குள், நாளிதழ்களின் புகைப்படக்காரர்கள், சில புத்தகங்களை எடுத்துச் சில சுட்டிகளில் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கிடைத்தது சான்ஸ் என்று புத்தகத்தைப் படிக்கத் துவங்கினார்கள் அந்தச் சுட்டிகள். ஆஜ் தக், என்.டி.டி.வி போன்ற செய்தி நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்புக்குத் தயாராய் வந்திருந்தனர். அவர்களும் சில குழந்தைகளைப் பேட்டிக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக ஆறரை மணிக்கு புத்தக விற்பனை துவங்கியது. முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு குழந்தை உற்சாக மிகுதியில் துள்ளினாளே, அடடா! கண்கொள்ளாக் காட்சி.

நானும் பெங்களூரிலேயே எட்டாவது ஆளாகப் புத்தகத்தை வாங்கிவிட்டுக் கடையிலிருந்து வெளியேறினேன். ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பும் போதே படிக்கத் துவங்கி விட்டேன். முதல்நாள் இரவே வீட்டில் கொறிக்க சில அயிட்டங்கள் வாங்கி வைத்திருந்ததால், காலை உணவுக்கெல்லாம் 'பிரேக்' எடுக்காமல் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த போது மணி பிற்பகல் இரண்டு.

ஐந்தாம் புத்தகத்தை விட பன்மடங்குப் பாய்ச்சல் இந்தப் புத்தகத்தில். தனிப்பட்ட முறையில் நான்காவது புத்தகம் எனது 'ஃபேவரைட்'. அதற்கு அடுத்த இடத்தில் ஆறாவதைச் சொல்லலாம். கணிசமான அளவு கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ரௌலிங். கடைசிப் புத்தகத்திற்கான 'நன்மை vs. தீமை' சண்டைக்கு வலுவான அடித்தளம் போடப் பட்டிருக்கிறது.

புத்தகத்தின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்: (குறைந்த அளவு Spoilerகள் உன்டு!!)

** க்ளைமாக்ஸ் மிக சோகமானதாக இருப்பதால் முதல் பாதியில் காமெடியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் ரௌலிங். குறிப்பாக இதுவரை கொஞ்சம் முசுடு போல வந்த டம்பிள்டோர் (Dumbledore), இதில் பட்டையைக் கிளப்பி விட்டார்.

** ஹாரி பாட்டருக்கும், ரானுக்கும் புத்தகத்தில் பல முத்தக் காட்சிகள் உண்டு!! ஹாரி பாட்டர், ஒரு வழியாகத் தனக்கு யார் மீது உண்மையான காதல் என்று புரிந்து கொள்கிறான்.

** 'பெயர் சொல்லக் கூடாத அவர்' (He Who Must Not Be Named) பற்றி நிறைய ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உண்டு

** நமது பழைய இந்தியப் புராணங்களில் மந்திரவாதிகள், ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு குகையினுள்ளே, ஒரு கிளியின் உடலில் தங்கள் உயிரைப் பத்திரமாக வைத்திருப்பார்களே, அந்த மாதிரி சமாசாரங்களும் உண்டு.

** டபுள் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஒருவரின் வேஷம் ஒரு வழியாகக் கலைகிறது (என்று கடைசிப் புத்தகம் வரும் வரையில் நம்பிக் கொன்டிருப்போம்!!)

16 Comments:

Blogger க்ருபா said...

ஹேரி பாட்டர் புத்தகம் பற்றி நானும்(?!) கேள்விப்பட்டிருக்கிறேன். ஆறு முடிந்து ஏழாம் பாகம் வேறா? அதற்கு முன்னாடியே அட்வான்ஸ் புக்கின்ங்க் வேறயா? அட? பொ.சே. மாதிரி இருக்குமா?

புக் சைஸ் பாத்த தடியா இருக்கும் போல இருக்கு? ரெண்டு மணிக்கெல்லாம் முடிச்சாச்சா? சிறந்த "படிப்பாளி".

க்ருபா
நான் ஹாரி பாட்டர் படித்தது எல்லாம் கிடையாது... ஒவ்வொரு வரியாகப் படித்து, அகராதியில் அர்த்தம் எல்லாம் பார்த்து. ம்ஹ்ஹூம். அடுத்த ஜென்மத்தில் இங்க்லீஷ் கற்றுக்கொண்டு எல்லாம் படித்து விடுவேன்.

July 17, 2005 1:07 AM  
Blogger Pavithra said...

Wow. So you've got the book already. Am so jealous. Now I'll have to take my turn to stand in q...

July 17, 2005 3:26 AM  
Blogger Pavithra said...

Wow. So you've got the book already. Am so jealous. Now I'll have to take my turn to stand in q...

July 17, 2005 3:28 AM  
Blogger Pavithra said...

Wow. So you've got the book already. Am so jealous. Now I'll have to take my turn to stand in q...

July 17, 2005 3:28 AM  
Blogger Moorthi said...

யண்ணாத்தே... எங்க பொஸ்த்தவ குழுமத்தில் குடுத்தேனே அந்த பொஸ்த்தகமும் இதுவும் ஒன்னா இருந்துச்சா? ஏன்னா கூட்டாளி ஒருத்தரு அது போலி புக்குன்னு சொன்னாக.

July 17, 2005 5:05 AM  
Blogger ravi srinivas said...

krupa-you can always choose a person who has read all the harry potter series as spouse and ask that person to tell you the story :)

July 17, 2005 9:10 AM  
Blogger ravi srinivas said...

This comment has been removed by a blog administrator.

July 17, 2005 9:12 AM  
Blogger ravi srinivas said...

சிறந்த "படிப்பாளி".


எழுத்தென்னும் தவம் சிலருக்கு
எழுத்துக் கூட்டிப் படிப்பது தவம் சிலருக்கு
படிப்பென்னும் தவம் சிலருக்கு

July 17, 2005 9:14 AM  
Blogger G.Ragavan said...

õõõõõ....¯í¸û À¾¢¨Å þô¦À¡ØÐ ÀÊì¸ô §À¡Å¾¢ø¨Ä. ¸¡Ã½õ. ¿¡ý þýÛõ Òò¾¸ò¨¾ô ÀÊòÐ ÓÊì¸Å¢ø¨Ä. ¿£í¸û ²¾¡ÅÐ þøº¢Âò¨¾ô §À¡ðÎ ¯¨¼ò¾¢Õó¾¡ø.....ÀÊòÐ ÓÊò¾Ðõ ¸Õò¾¢Î¸¢§Èý.

¿¡ý Å¢ÊÂü¸¡¨Ä¢§Ä§Â ¦Àí¸é÷ À¢Ã£Á¢Â÷ Òì Š¼¡Ä¢ø Å¡í¸¢ Å¢ð§¼ý. ¬É¡ø À¡Õí¸û. ÀÊì¸ Å¢¼¡Áø §Å¨Ä.

July 18, 2005 3:59 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//க்ருபா said...
ஹேரி பாட்டர் புத்தகம் பற்றி நானும்(?!) கேள்விப்பட்டிருக்கிறேன். ஆறு முடிந்து ஏழாம் பாகம் வேறா? அதற்கு முன்னாடியே அட்வான்ஸ் புக்கின்ங்க் வேறயா? அட? பொ.சே. மாதிரி இருக்குமா?//

க்ருப்ஸ்! பொ.செ. மாதிரி யார் தான் எழுத முடியும்? ஆனாலும், ஆப்பிளோடு ஆரஞ்சை ஒப்பிடக் கூடாது. அது Historical action-romance. இது fantasy thriller-growing up. ஒவ்வொண்ணும் ஒரு வகையில் டாப்பு தான்.

July 18, 2005 6:52 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//Pavithra said...
Wow. So you've got the book already. Am so jealous. Now I'll have to take my turn to stand in q... //

Yeah Princess! I'm a Harry Potter fan, through and through!!

(read the book to understand that one..)

July 18, 2005 6:54 AM  
Blogger G.Ragavan said...

மீனாக்ஸ் நானும் புத்தகத்தை முடித்து விட்டேன். நன்றாகவே வந்திருக்கிறார். ஐந்தாவது புத்தகத்தில் சில தவறுகளைச் செய்திருந்தார் ரௌலிங். அது புத்தக சுவாரசியத்தைக் குறைத்தது. இந்த முறை அந்தத் தவறைச் செய்யவில்லை.

குழந்தைகள் புத்தகமாகத் தொடங்கிய புத்தகம் கதாபாத்திரங்கள் வளர்வது போல வளர்ந்து இப்பொழுது வளர்ந்தவர்களுக்கான புத்தகமாக இருக்கிறது. இயல்பான வளர்ச்சி.

முடிவு ஒரு இறுக்கத்தை உண்டாக்குவதென்னவோ உண்மைதான். ஆனால் அது ஹாரி பாட்டரின் கதாபாத்திரத்தை மெருகேற்றும் என்பதில் ஐயமில்லை.

July 20, 2005 1:57 AM  
Blogger க்ருபா said...

மீனாக்ஸ், நான் ஹாரி பாட்டர் ஏதோ கொழந்தைகள் கதைன்னு நெனச்சேனே. எல்லாரும் படிக்கறதுதானா?

எனக்கு அமுல் டப்பா நோற்பினும் பார் லைன் (டாவின் சி கோடு) அனுப்பிச்சுது. இன்னும் படிச்சு முடிக்கலை.

ரவி ஸ்ரீநிவாஸ், ஹாரி பாட்டர் படிச்ச பொண்ணா? (இல்லாத) குடும்பத்துல கொழப்பம் உண்டாக்கிடுவீங்க போலருக்கே! உங்க தவம் லிஸ்டோட "படிச்சாலும் புரியாத சாபம் சிலருக்கு"ன்னும் சேத்துக்கோங்க

க்ருபா

July 20, 2005 4:47 AM  
Blogger Vetri Thirumalai said...

Meenaks

I was a regular reader of your vimarsanam blog. There is no updates in the blog after chadramukhi. why? have you not seen any films after that or do you think they are not worth watching.

July 21, 2005 3:00 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//Vetri Thirumalai said...
Meenaks

I was a regular reader of your vimarsanam blog. There is no updates in the blog after chadramukhi. why? have you not seen any films after that or do you think they are not worth watching. //

திருமலை, சந்திரமுகிக்குப் பிறகு நான் பார்த்த குறிப்பிடத்தக்க படங்களாக 'அந்நியன்', 'உள்ளம் கேட்குமே' ஆகிய இரண்டையும் சொல்லலாம். ஆனால் அந்நியனை ஊட்டியில் ஒரு வீணாப் போன தியேட்டரில் பார்த்தேன். அதை வைத்து விமர்சனம் செய்வது சரியாக எனக்குத் தோன்றவில்லை. ரெண்டாவது முறை பெங்களூரில் பார்ப்பதற்கும் தைரியம் வரவில்லை. :-))

உள்ளம், கேட்குமே விமர்சனம் எழுத வேண்டுமென்று நினைத்து அப்புறம் தள்ளிப் போய் விட்டது. மன்னிக்கவும். இனி தொடர்ந்து எழுதுவேன்.

உங்கள் எதிர்பார்ப்பிற்கு நன்றி.

July 22, 2005 6:40 AM  
Blogger qvxu75umkl said...

This comment has been removed by a blog administrator.

August 09, 2005 6:16 PM  

Post a Comment

<< Home