A Suitable Thanks
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தமான ஒருவர், விக்ரம் சேத் (Vikram Seth). அவரது முதல் புதினம் A Suitable Boy. 1349 பக்கங்களுடன் (paperback-ல் 1488!!), ஆங்கிலத்தில் ஒரே தொகுதியாக வெளிவந்த மிக நீண்ட படைப்பாகக் கருதப்படுகிறது. பத்து ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து 1993-ல் வெளியானது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த சூழலில் பூர்வ பிரதேசம் என்ற கற்பனை மாநிலத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் என்னை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அங்கங்கே ரைமிங்காக ஒலிக்கும் இருவரிக் கவிதைகளுடன் மிகுந்த சுவாரஸ்யமாகச் செல்லும் நாவல் இது. லதா என்ற இளம்பெண்ணின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை அன்றைய சூழல் கலந்து, அவளின் உறவினர்களின் வாழ்க்கையோடு விளக்கி கொஞ்சம் இந்து-முஸ்லிம் சிக்கலைக் கலந்து சுவையாகப் பின்னிச் செல்கிறது கதை.
நாவலின் முதல் பக்கத்தில் தன்னுடைய நன்றியை ஒரு கவிதை வடிவில் பலருக்கும் அறிவிக்கிறார் விக்ரம் சேத். என்னவொரு குறும்பு பாருங்கள். குறிப்பாக அநதக் கடைசி இரண்டு வரிகள். அட்டகாசம்!!
(சானட் என்பது புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை வடிவம். 14 வரிகள் கொண்டது.)
நாவலின் முதல் பக்கத்தில் தன்னுடைய நன்றியை ஒரு கவிதை வடிவில் பலருக்கும் அறிவிக்கிறார் விக்ரம் சேத். என்னவொரு குறும்பு பாருங்கள். குறிப்பாக அநதக் கடைசி இரண்டு வரிகள். அட்டகாசம்!!
A Word of Thanksவிக்ரம் சேத் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி உண்டு. "நீங்கள் எப்படி இறக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?" என்று இவரிடம் கேட்கப்பட்ட போது இவர் அளித்த பதில்: "ஒரு சானட்டின் (sonnet) பதிமூன்றாவது வரியில் இறந்து போக ஆசைப்படுகிறேன்."
To these I owe a debt past telling:
My several muses, harsh and kind;
My folks, who stood my sulks and yelling,
And (in the long run) did not mind;
Dead legislators, whose orations
I've filched to mix my own potations;
Indeed, all those whose brains I've pressed,
Unmerciful, because obsessed;
My own dumb soul, which on a pittance
Survived to weave this fictive spell;
And gentle reader, you as well,
The fountainhead of all remittance,
Buy me before good sense insists
You'll strain your purses and sprain your wrists.
(சானட் என்பது புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை வடிவம். 14 வரிகள் கொண்டது.)