Tuesday, August 17, 2004

மண்ணு மணம்

இந்த வாரம் விகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில என்னோட கல்லூரி சீனியர் 'எனக்குப் பிடித்த கவிதை-2' னு வெ. அனந்த நாராயணன் எழுதின கவிதையைப் போட்டிருக்காரு. உண்மையாவே ரொம்ப நல்லா இருந்துச்சு. கவிதைக்குத் தலைப்பு: "அமெரிக்காவில்..."

அமெரிக்காவில்...

அம்மா இங்கே
அசலான நெல்லூர்
அரிசி கிடைக்கிறது
டாலர் அதிகமில்லை
வடிப்பதும் சுலபம்
மைக்ரோவேவ் அடுப்பில்
வெந்து முடிக்க
ஐந்தே நிமிடங்கள்
கஞ்சி வடிக்கும்
கஷ்டங்கள் இல்லை
கரிப்பிசுக்கு,
கல்நெல்லில்லை
ஆனால் ஏனோ
இந்திய அடுப்பில்
அழுதுகொண்டு தினமும்
அரைக் குழைசலாய்
நீ வடித்த ஐ ஆர் எட்டின்
சுவை கூட இல்லை!
கவிதை பிடிச்சிருக்கிறதில உள்ள சூட்சுமம் என்னன்னு நெனச்சிப் பார்க்கிறேன். மண்ணு மணம் கமழ இருக்கிறது தானோ?

நான் எழுதியதில் எனக்குப் பிடித்தமான ஒரு கவிதை என் குலதெய்வக் கோவில் பற்றியது. கற்பனை கலந்து எழுதிய அந்தக் கவிதை, எனக்கும் இன்னும் படித்த பல பேருக்குப் பிடித்திருந்ததற்கும் காரணம் அந்த மண்ணு மணம் என்கிற சங்கதி தானோ? இருக்கும் இருக்கும்.

3 Comments:

Blogger ரவியா said...

//எனக்கும் இன்னும் படித்த பல பேருக்குப் பிடித்திருந்ததற்கும் காரணம் அந்த மண்ணு மணம் என்கிற சங்கதி தானோ? // அதே தான்..ஆனால் உன் கவிதையில் ஒர் மெஸ்ஸேஜ் வேறு இருக்குதே !! அதுல பட்டணவாடையடிக்குதே !!

August 18, 2004 6:26 AM  
Blogger ரவியா said...

ஒரு சந்தேகம் மீனாக்ஸ்!

"படித்த பல பேருக்கு" கவிதையைப் பிடித்திருந்ததா?

"கவிதையைப் படித்த" பல பேருக்குப் அது பிடித்திருந்ததா?

August 18, 2004 6:29 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

"கவிதையைப் படித்த பலபேருக்கும்" என்பதே சரி.

August 18, 2004 6:38 AM  

Post a Comment

<< Home