Tuesday, September 07, 2004

தீராநதியில் காலபைரவன் கவிதை

குமுதம் தீராநதியில் காலபைரவன் எழுதிய மரணம் பற்றிய இரு கவிதைகள் வெளிவந்துள்ளன. இரண்டாவது கவிதை என்னைக் கவர்ந்தது.

ஒரு நல்ல ஆசிரியரைப் போல
கைதேர்ந்த ஓர் வைத்தியரைப் போல
நுட்பமான ஓர் விஞ்ஞானியைப் போல
நடுநிலை தவறாத ஒரு நீதிபதியைப் போல
தன் வேலையை
மிக கச்சிதமாகவும்
பச்சாதாபங்களுக்கு அப்பாற்பட்டும்
செய்து முடிக்கின்ற
மரணத்தை
நாம் ஏன்
தவறாகப் புரிந்துகொள்கிறோம்.
கடைசி வரியின் கேள்வி முக்கியமானது. என்னை யோசிக்கச் செய்தது.

ஆசிரியர் கற்றுத் தருவது, நமக்கு அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில்..

வைத்தியர் செய்யும் மருத்துவம், நமக்குப் பரிச்சயமான மருத்துவ நூல்களின் அடிப்படையில்..

விஞ்ஞானி செய்யும் ஆராய்ச்சிகள், நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய அறிவியல் கூறுகளின் அடிப்படையில்..

நீதிபதி அளிக்கின்ற தீர்ப்புக் கூட நாமறிந்த சட்டத்தின் மாட்சிமைக்கு உட்பட்டுத்தான்..

மரணம் ஒரு ஆசிரியராக கற்றுத் தரும் பாடமும், வைத்தியராக செய்யும் சிகிச்சையும், விஞ்ஞானியாக நடத்தும் ஆராய்ச்சியும், நீதிபதியாக வழங்கும் தீர்ர்ப்பும் நமக்குக் கொஞ்சமும் புரியாத ஏதோ மர்மத்தின் அடிப்படையில் என்பதால் தான் நாமும் மரணத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் போலும்.

5 Comments:

Blogger ஜெ. ராம்கி said...

மரணத்துக்கு பின்னாடி மரணத்தை பத்தி புரிஞ்சுக்க முடியுமோ என்னவோ?!

September 21, 2004 3:41 AM  
Blogger Badri Seshadri said...

மீனாக்ஸ்: align=justify என்று இருப்பதை மாற்றவும். (அதை எடுத்துவிடுதல் நலம்)

October 05, 2004 12:07 AM  
Blogger Badri Seshadri said...

மன்னிக்கவும்! letter-spacing:xxx என்று ஸ்டைல்ஷீட்டில் உள்ளவற்றை முழுவதுமாகத் தூக்கிவிடவும். அது இருப்பதால் பல வரிகள் firefoxஇல் சரியாகத் தெரிவதில்லை.

October 05, 2004 12:10 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Badri, I have removed the letter-spacing tags as suggested.

October 08, 2004 6:27 AM  
Blogger வீரமணிஇளங்கோ said...

மீனாக்ஸ்,
மர்மத்தின் அடிப்படையில் என்பதால்தான் நாமும்,மரணத்தைப் புரிந்து கொள்ளத்தவறுகிறோம் என்று கவிஞனின் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் விடை சரிதான்.

ஆனால்,என் பார்வையில்,கவிஞனின் கேள்வியானது வேறுபட்டுத்தெரிகிறது.

கவிஞன், ஏன் தவறாகப் புரிந்து கொள்கிறோம் என்ற வாக்கியத்தில் சொல்ல வந்தது,

தனக்கிட்ட பணியை,தான் செய்துமுடிக்க வேண்டிய வேலையை,
நேர்மையாய் ,பிழையின்றி செய்துமுடிக்கின்ற
ஓர் ஆசியரியர் போல ,பட்டியலிலுள்ள இன்னபிறரையும் போல

சரியாக செய்து முடிக்கின்ற மரணத்தை
நாம் ஏன் குறைபட்டுக்கொள்கிறோம் என்பதுதான் நம் புரிதல் குறித்ததான கவிஞனின் கவலை.


மரணத்தை நாம் புரிந்தகொள்ளத்தவறுகிறோம் என்பதல்ல கவிஞனின் கவலை.
மாறாக,நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோமே என்றே அவன் கவலைப்படுகிறான்.

வீரமணி இளங்கோ..

October 31, 2004 6:47 AM  

Post a Comment

<< Home