Monday, June 06, 2005

மூன்று சங்கர்களும் ஒரு ரவியாவும்

அண்மையில் ரவியா இந்தியாவுக்கு வந்திருந்த போது க்ருபாசங்கர், 'சுவடு' ஷங்கர் மற்றும் நான் ஆகிய மூவரும் அவரைப் பார்க்க ஒரு நாள் புதுவைக்குப் போயிருந்தோம். நான் பெங்களூரிலிருந்து முதல் நாள் இரவே கிளம்பி அதிகாலை புதுவை அடைந்தேன். நான் பேருந்தை விட்டிறங்கிக் காத்திருந்த இடத்திற்கு ஐந்து மணிக்குத் தூக்கக் கலக்கத்தோடு ரவியா வந்து என்னை அழைத்துச் சென்றார். ஆறு மணி முதல் ஏழு மணி வரை தமிழ் வலையுலக நிலவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருவரும் வாக்கிங் போனோம்.

காலை குளித்து உணவருந்தி விட்டு அரவிந்தர் ஆஸ்ரமத்துக்குச் சென்றோம். அருகே இருந்த விநாயகர் கோவிலுக்கும். கோவில் வாசலில் இருந்த யானை என்னை மிகவும் கவர்ந்தது. அண்மையில் விகடன் இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கதாவிலாசம் அத்தியாயத்தில் யானைகளைப் பற்றி எழுதியிருந்தார். யானைகளைப் புரிந்து கொள்வதில் மனிதர்கள் பல வேளைகளில் கண்ணிருந்தும் குருடர்களாகத் தான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.அடுத்து ரவியா வீட்டுக் குழந்தை ஒன்றின் முடியிறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, நகருக்குத் திரும்பி வந்தோம். அதற்குள் க்ருபாவும் ஷங்கரும் வந்து சேர்ந்தனர். ஆளுக்கொரு புகைப்படக் கருவியோடு திரிந்து கொண்டிருந்தோம். க்ருபாவின் புகழ்பெற்ற கைத் தொலைபேசிக் காமிராவை அன்று தான் பார்த்தேன்.எனக்குத் திருமண வயது வந்து விட்டதால், பெண் வீட்டாருக்கு அனுப்பி வைக்கும் தன்மையதாய் ஒரு புகைப்படம் எடுத்துத் தருவதாய் ரவியா சொன்னார். நானும் சம்மதித்து ஒரு தென்னை மரத்தில் சாய்ந்து ரொமாண்ட்டிக்காக ஒரு போஸ் கொடுத்துப் பார்த்தேன். 'கோலிவுட்டுக்கு ஒரு புதிய வில்லன் கிடைத்து விட்டார்!!' எனும்படியாய் வந்திருக்கிறது என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.இந்தக் களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே க்ருபாவின் ஓரப் பார்வைக்கு வேலை வந்து விட்டது. தெருவில் நடந்து சென்ற ஒரு அழகிய இளம்பெண்ணின் கடைக்கண் பார்வையைப் பெற பிரயத்தனம் செய்யும் க்ருபாவின் முயற்சி:இதை நாங்கள் 'கண்ணும் களவுமாகப்' பிடித்து விட்டதால் க்ருபா வெட்கித் தலை கவிழ்ந்து நிற்கும் காட்சி:ஆனாலும் கலங்கவில்லை க்ருபா. சில நொடிகளில் மனதைத் தேற்றிக் கொண்டு ஒரு 'லகலகலகலக' பார்வை பார்க்கும் க்ருபா:இந்தக் காமெடிகளை நிறுத்திக் கொண்டு மாலை கவிந்ததும் ஆரோவில் மாத்ரி மந்திர் என்ற சர்வமத ஆலயத்துக்குச் சென்றோம். நீண்ட நடைப்பயணத்துக்குப் பிறகு அந்த ஆலயத்தை அடைந்தோம். அங்கே மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தூரத்திலிருந்து மட்டும் பார்க்க முடிந்தது. புகைப்படம் எடுப்பது தடை செய்யப் பட்டிருந்தது. இருந்தாலும் சில படங்கள் எடுத்தோம்.திரும்பி வரும் வழியில் ஆலமர நிழலில் பயணிகள் இளைப்பாறும் ஓர் அரிய காட்சி:இறுதியாக, பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞர், எங்கள் உள்ளம் கவர் கள்வர் ரவியாவின் கவர்ச்சிகரமான ஆளுமை, இங்கே எனது கைவண்ணத்தில்:ஆரோவில்லிலிருந்து திரும்பும் வழியிலேயே பேருந்து நிலையத்தில் க்ருபாவும் ஷங்கரும் கழன்று கொண்டனர். நான் இரவு கிளம்பினேன். இனிமையான அனுபவங்களை மனசினுள் பதியன் போட்டுக் கழிந்தது அந்த நாள்.

18 Comments:

Blogger -/பெயரிலி. said...

hihi! suvadu shankar paiyanukku mukaththilE muthirchchiyin suvadu vanthirukku ;-)

June 06, 2005 10:32 AM  
Blogger Shankar said...

meenaks dhaan gum-munnu irukkeeru. silaash dottu kaarare, namakku mudhirchi eppavo vandhaach. kannai kasakkikittu paarum :))

June 06, 2005 12:00 PM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

பெயரிலி சொன்னதையே நானும் நினைத்தேன். சுவடுக்காரர் வித்தியாசமா இருக்கார். ரொம்ப நாள் அமைதியா இருந்தார் இல்லையா - பட்டாம்பூச்சியாகிவிட்டார் போலும் :-)

மீனாக்ஸ், படங்கள் எல்லாம் நன்று (உடன் இருக்கும் உரையும்). குறிப்பாய் யானை படம் அழகு.

June 06, 2005 7:41 PM  
Blogger அல்வாசிட்டி.விஜய் said...

யோவ் மீனாக்ஸ், ப்ளாக்கு ஓரத்துல தேமேன்னு கணனியை தட்டிக்கிட்டு பரிதாபமா ஒரு போஸ் இருக்குல்ல அதை தூக்கிட்டு தென்னை மர போஸ் போடுங்கைய்யா. கட்டாயம் ப்ளாக்கு வழியா ஒரு பிகர் மாட்டி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்.

க்ரூபாவின் லக்லக்லக்கலக்க நன்று.க்ரூபா அது என்ன போன் மாடல்ய்யா?

சுவடு ஷங்கர் அறிமுகம் எனக்கு அதிகமில்லை.

ரவியாவை நேரிலேயே நானும் பார்த்துவிட்டேன். அவரோட எடுத்துகிட்ட ஒரு படம் என்கிட்டேயும் இருக்குங்கோ

June 06, 2005 8:04 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

யாரய்யா அது இங்கே ஆங்கிலத்தில் பின்னூட்டம் அளிப்பது? தமிழில் பின்னூட்டம் அளிப்பதே சிறப்பு.

சுவடு சங்கர் என்றைக்கு "தேவதையின் படமொன்றைக் கிழித்துப் போட்டேன்" என்று லாண்டரி லிஸ்ட் போட்டானோ அன்றே பயலுக்கு முதிர்ச்சி வந்து விட்டது ;-))

June 06, 2005 8:19 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

விஜய் சாரே! நான் தேமேன்னு ஓரமா இருக்கிறது பிடிக்கலையா சிக்கல்ல மாட்டி விடப் பார்க்கிறீர்?

June 06, 2005 8:25 PM  
Blogger -/பெயரிலி. said...

தமிழை ஆங்கிலத்திலே தட்டியதற்கு மன்னிக்கவும். keyman அடிக்கடி சொல்லாமற் கொள்ளாமற் காணாமற்போய்விடுகிறது.

சுவட்டுத்தம்பி. நான் சொன்னது, உங்கள் பதிவோடு தோன்றும் முகத்திற்கும் இங்கே தோன்றின முகத்துக்குமான வித்தியாச(த்)தை.

June 06, 2005 10:23 PM  
Blogger ரவியா said...

:))

"ஆய்த எழுத்து" போட்டோ எங்கேபா?

ரவியா

June 07, 2005 4:46 AM  
Blogger வீ. எம் said...

க்ருபா ,
ஏதாச்சும் சிக்குச்சா???


நல்ல பதிவு மீனாக்ஸ்! ரசித்துப் படித்தேன்.. !!

அப்புறம் பாண்டி பற்றிய பதிவுல , ஏதோ முக்கியமா மிஸ்ஸிங் மாதிரி இருக்கு... ஆனா என்னனு தான் புரியலை...
யாருக்காச்சும் புரியுதா?

வீ .எம்

June 07, 2005 5:05 AM  
Blogger ரவியா said...

//ஏதோ முக்கியமா மிஸ்ஸிங் மாதிரி இருக்கு//

அத ஏன் கேட்கிறீங்க !!! இந்த காலத்து பசங்க ரொம்ப நல்ல பசங்களா இருக்காங்கலா அ நடிச்சாங்களான்னு தெரியில்ல !! பாண்டிக்கு வந்ததே தண்டம் என்று icarus சொல்லுவார்!!!

:))

June 07, 2005 6:43 AM  
Blogger icarus prakash said...

// இந்த காலத்து பசங்க ரொம்ப நல்ல பசங்களா இருக்காங்கலா அ நடிச்சாங்களான்னு தெரியில்ல !! பாண்டிக்கு வந்ததே தண்டம் என்று icarus சொல்லுவார்!!! //

தோ... சொல்ட்டேன்.... கொய்ந்தப் பசங்களை எல்லாம் பாண்டிக்குக் கூட்டிட்டுப் போனா இப்படித்தான் :-)

June 07, 2005 7:21 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

அதென்னமோ ப்ரகாசரே! சங்கர்னு பேரு வச்சவங்க எல்லோருமே அப்படித்தான் ரொம்ப "நல்லவங்களா" இருப்பாங்களாம்.

June 07, 2005 10:14 AM  
Blogger Narain said...

// அதென்னமோ ப்ரகாசரே! சங்கர்னு பேரு வச்சவங்க எல்லோருமே அப்படித்தான் ரொம்ப "நல்லவங்களா" இருப்பாங்களாம்.//

த்தோடா.......

//தோ... சொல்ட்டேன்.... கொய்ந்தப் பசங்களை எல்லாம் பாண்டிக்குக் கூட்டிட்டுப் போனா இப்படித்தான் :-)//

அப்படிப் போடு சபாசு!! பாண்டி போனால், சீசர்-ன்னு ஒரு சரக்கு கிடைக்கும். அப்புறம் சென்னையில கிடைக்காத, பகார்டி ரம், பகார்டி பளேவர்டு டிரிங்ஸ் கிடைக்கும். அதையெல்லாம், வுட்டுப் போட்டு.... ;-)

June 07, 2005 10:17 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

நாராயணனு தலீவா! நாங்க மூணு பேரும் பான்டிச்சேரிக்கு ஒரு "ஆன்மீகத் தேடலுக்காவப்" போனோம். அதுல போய் கண்ட சரக்கப் பத்திப் பேசிக்கினு.. அய்யய்யே!! :-))

June 07, 2005 10:29 AM  
Blogger க்ருபா said...

எஸ்கிஸ்மீ. ஐ வெறி லேட் கம்மிஃபையிங் ரீடிங்க் திஸ் ப்ளாக். ஊருக்கு போயிங்க், டூருக்குப் போயிங்க், ஆல் பிலாக் ரீடிங்கு ஒன்லீ நவ்வு பேக்லாக்.

மீஞ்சு, அந்த போட்டோக்கெல்லாம் கத வசனங்கூட பரவால்லபா, ஆனா அல்லா பட்த்கும் பேரு குட்து பக்கெட்டுல போட்டுக்குறுயே, அதாம்பா டகால்ட்டி. ஆனா இந்த cornerlook.jpg, accused.jpg கொஞ்சம் ஓவருபா. ஏதோ newvillain.jpg பாத்து மனச தேத்திக்கறேன்.

கலக்கிப்புட்ட போ மொத்தத்துல.

June 13, 2005 3:20 AM  
Blogger க்ருபா said...

விஜய், என்னோடது philips 355. மீனாக்ஸோட ஐஸ்வர்யாராய் படம் போட்ட டாட்டா இண்டிகாம் என்ன மாடல்னு தெரியலை, கேளுங்க. படம் எடுக்கும்போது சிரிக்கக் கூடாதுன்னு பகீரதப் ப்ரயத்னம் பண்ணியும் முடியலை. சரின்னு நாக்கால பல்லை மூட நெனச்சு... கடைசில 'லக்கலக்க'வா மாறிப்போச்சு.

பெயரிலி, சுவடு ஷங்கர் மொதல் படத்துல கொஞ்சம் வயசான மாதிரிதான் இருக்கு. நேர்ல அவ்வளவு தூரம் இல்லை. ஆனா அந்த ப்ளாகர் ப்ரொஃபைல்ல கோல்ட் மெடல் வாங்கின சமயம் போட்டு இருக்கற படம் எல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான்.

June 13, 2005 3:27 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

க்ருபா கண்ணா! என் மொபைல்ல ஐஸ் படம் ஒரு காலத்துல இருந்தது மெய் தான். ஆனா சந்திரமுகி ரிலீஸ்க்குப் பின்னால சூப்பர் ஸ்டார் உள்ளார இருந்து அல்லாருக்கும் ஒரு சல்யூட் வச்சிக்கினு கீறாரு பா.

June 13, 2005 8:14 PM  
Blogger கோபி(Gopi) said...

மீனாக்ஸ்,

படங்களும் கட்டுரையும் அருமை! ;-)

(கடல்)தண்ணியில்லாம பாண்டிச்சேரியை படமெடுக்க முடியும்னு எனக்கு இப்பதான் தெரியுது..


போட்டோ பக்கெட்டுக்கு பதிலா Hello பயன்படுத்தினீங்கன்னா சுலபமா இருக்கும்.

பயன்படுத்திப் பாத்து சொல்லுங்க..

June 14, 2005 1:45 AM  

Post a Comment

<< Home