Tuesday, June 07, 2005

Book Meme

ஆங்கில வலைப்பதிவரான செந்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். Meme என்பதைப் பற்றிச் சொல்லி என்னையும் அதில் பங்கு பெறுமாறு
அழைத்திருந்தார். (நான், பிரகாஷ், பத்ரி ஆகிய மூவரை)

Meme என்றால் என்னவென்று அகராதியில் தேடிப் பார்த்தேன். 'ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் ஏதேனும் பொருள் குறித்த சிந்தனை' என்றிருந்தது. அவர் அழைப்பு விடுத்த சிந்தனை புத்தகங்களைப் பற்றியது. ஐந்து கேள்விகள் வாயிலாக. அவற்றுக்கு எனது பதில்களைக் கீழே தந்திருக்கிறேன்.

என்னிடம் இருக்கும் புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை: 80+

கடைசியாக வாங்கிய புத்தகம்: The Mimic Men by VS Naipaul

கடைசியாகப் படித்து முடித்த புத்தகம்: The Writerly Life by RK Narayan

என் வாழ்க்கையில் மிக முக்கியமானவையாகக் கருதும் ஐந்து புத்தகங்கள் (தமிழ்/ஆங்கிலம்/இரண்டிலும்):

ஆங்கிலம்

Atlas Shrugged by Ayn Rand (எவண்டா அவன், ஜான் கால்ட்?)

Everything by Kahlil Gibran (சிந்தனையின் பாய்ச்சலும், கருத்தாழமும், அடடா!)

A Suitable Boy by Vikram Seth (இப்படித்தான் இருக்க வேண்டும் புதினம் என என்னை நினைக்க வைத்ததால்!)

Harry Potter series by JK Rowling ('என் மகள்' ஹெர்மையொனி இருக்கும் புத்தகம்...)

Twenty Love Poems and a Song of Despair by Pablo Neruda (என்னமா உருகியிருக்காரு, அவரு பெரிய தல மா!!)

தமிழ்

பொன்னியின் செல்வன் by கல்கி (மானசீக குரு # 1) (வந்தியத்தேவனும் ஒருவகையில் மானசீக குரு தான், ஹி ஹி!!)

விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பு / எப்போதும் பெண் by சுஜாதா (மானசீக குரு # 2)

பாரதியார் கவிதைகள் (தமிழ்ப்பெருங்கவிஞன்)

என் பெயர் ராமசேஷன் by ஆதவன் (the ultimate growing up story)

புதுமைப்பித்தன் சிறுகதைகள் / தி.ஜானகிராமன் சிறுகதைகள் (இரு பெரும் தமிழ்ச் சிறுகதை ஆளுமைகள்)

இதே விளையாட்டைத் தொடர்ந்து ஆட நான் பரிந்துரைக்கும் ஐந்து தமிழ் வலைப்பதிவாளர்கள்:

சுவடு ஷங்கர்
மதி கந்தசாமி (மேடம், இது ரெண்டாவது இன்விடேஷன்)
தங்கமணி
பாஸ்டன் பாலாஜி
பவித்ரா

5 Comments:

Blogger Thangamani said...

நல்ல விளையாட்டு :)

June 07, 2005 5:38 PM  
Blogger Kannan said...

//என் பெயர் ராமசேஷன் by ஆதவன் (the ultimate growing up story)

புதுமைப்பித்தன் சிறுகதைகள் / தி.ஜானகிராமன் சிறுகதைகள் (இரு பெரும் தமிழ்ச் சிறுகதை ஆளுமைகள்)//

Aye aye!

June 07, 2005 8:51 PM  
Blogger Chenthil said...

NanRi Meenaks. Pudumaippiththanai skip panna naan romba yosichen, that is the beauty of this tag. Forces you to take a decision :-)

June 07, 2005 11:32 PM  
Blogger Thangamani said...

மீனாக்ஸ்,
எனது பதிவு
http://ntmani.blogspot.com/2005/06/blog-post.html

நன்றிகள்

June 08, 2005 6:03 PM  
Blogger பாலராஜன்கீதா said...

அன்பு மீனாக்ஸ்,

யார் அய்ன் ரேண்டின் அட்லாஸ் ஷ்ரக்ட் எழுதுவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன். நானும் என் மகளும் போட்டி போட்டுக்கொண்டு மறுபடி மறுபடி அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் என்னைச் செல்லமாக Hank என்று அழைக்கிறாள். நானும் அவளை ஃபிரிஸ்கோ என்று அழைக்கிறேன். நான் தான் ஜான் கால்ட் என்று இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்

June 09, 2005 10:55 AM  

Post a Comment

<< Home