Sunday, August 20, 2006

லுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் & an anecdote

திருமணத்திற்கு முன்பு வரை நானெல்லாம் "லுங்கி" கட்சிக்காரன். ஏதோ ஒரு படத்தில் மலேசியாவில் மாட்டிக் கொள்ளும் விவேக் உரைப்பது போல் பட்டாபெட்டி அண்டர்வேர் எல்லாம் போட்டுக் கொண்டு, தொடை தெரிய ஏற்றிக் கட்டிக் கொள்ளவில்லையென்றாலும், லுங்கியின் காற்றோட்டமான ஸ்டைல் எனக்குப் பிடித்தே இருந்தது. பூப்போட்ட டிஸைன்களை விட, நீலக் கலரில் கோடுகளும் கட்டங்களும் நிறைந்த லுங்கிகள் எனது favourite.

திருமணத்தின் போது, வாழ்க்கையிலேயே முதல் முறையாக வேஷ்டி கட்டிக் கொண்ட போது, பல ஆண்டுகளின் லுங்கி கட்டிய அனுபவம், "எப்போது அவிழ்ந்து தொலைக்குமோ?" போன்ற பல டென்ஷன்களை பெருமளவு குறைத்தது என்றால் மிகையாகாது. நிம்மதியாக தாலியைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது. :-)

திருமணத்திற்கு முன்பெல்லாம் என் ஏரியாவான பெரியார் நகரில் அருகிலிருக்கும் கடைகளுக்கு லுங்கியில் செல்வதற்கு நான் பெரிதும் தயங்கியதில்லை. லுங்கியை மடித்துக் கட்டுவதன் சௌகரியம், அணிந்தால் மட்டுமே புரியும். லுங்கியிலுள்ள ஒரே குறைபாடு - என்னைப் பொறுத்த வரை - அதில் ஒரு பாக்கெட்டுக்கு வழி இல்லையே என்பது மட்டுமே. பணம் மற்றும் செல்பேசி வைப்பதற்காகவாவது அணிந்திருக்கும் டி-ஷர்ட்டைக் கழற்றி விட்டு சட்டை அணிந்து செல்ல வேண்டியது அவசியமாகி விடும். பாக்கெட் வைத்த லுங்கிக்கு என்ன சந்தைத் தேவை இருக்கிறது என்று வருங்காலத்தில் ஆய்வு செய்து கண்டுபிடித்து ஆவன செய்ய வேண்டும். மற்றபடி, ரொம்ப சுகமான ஆண் ஆடைகளில் (மலையாள தேசத்தில் பெண் ஆடையும் கூட) லுங்கிக்கு மகத்துவமான இடம் உண்டு.

இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனம் போய் விட்ட அபார்ட்மெண்டில் தற்போதெல்லாம் நான் லுங்கியைத் தவிர்த்து விட்டு ஷார்ட்ஸ்க்கு மாறி விட்டேன். காரணம், அபார்ட்மெண்ட் சகவாசிகளின் peer pressure ஆக இருக்கலாம். அல்லது என் மாமனார், இந்த வயதிலும் தென் தமிழகத்தின் சிறுநகரம் ஒன்றிலேயே ஷார்ட்ஸ் அணிந்திருப்பதாலும் இருக்கலாம்.

ஷார்ட்ஸ்-ல் இரு வகைகள் உண்டு. பள்ளிக் காலங்களில் முழங்காலுக்கு மேல் சில அங்குலம் உயரத்தில் ஓரளவு இறுக்கமாக, ஓரளவு தொடை தெரிய அணிவது ஒரு வகை. தெள்ளு தமிழில் அரைக் கால்சட்டை எனலாம். முழங்காலை மூடியும் மூடாமலும் தொளதொளவென்று அணிவது இன்னொரு வகை. இதனை பெர்முடாஸ் (Bermuda shorts) எனவும் அழைப்பதுண்டு. Casuals என்ற வகையான உடை இது என்று நினைத்திருந்த எனக்கு, பெர்முடா தீவில் இதனை சட்டை, கோட் மற்றும் டை-யுடன் business formals-ஆக அணிந்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டு மிகுந்த ஆச்சர்யம்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பதைப் போல், கீழே கீழே இழுத்து அணிந்தாலும் ஷார்ட்ஸ் முழு பேண்ட் ஆகாது. இவை இரண்டுக்கும் இடையில் இருக்கும் ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன், தமிழில் செல்லமாக முக்கா பேண்ட் என்று அழைக்கப்படும். முழுமையான சௌகரியமும் இருக்காது. முழங்காலின் பின்புறம் அடிக்கடி வியர்த்துத் தொலைக்கும். எனக்கு அவ்வளவு விருப்பமில்லாத ஒரு உடை இது. பெங்களூரில் எனது அறைவாசிகளான நண்பர்கள் பலரும் முக்கா பேண்டுக்கு ஆதரவளித்த போதும் லுங்கிக்கு எனது ஓட்டை மனப்பூர்வமாக அளித்தவன் நான்.

சென்ற வார இறுதியில் மாமனார் ஊரில் ஷார்ட்ஸ் அணிந்து அலைந்து திரிந்த போது, சில curious பார்வைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததென்றாலும் அதிலே எந்த வித அசௌகரியமும் இல்லை. Ah, to every dog, his dress.

And now to the anecdote.

புதிய கருப்பு நிற ஷார்ட்ஸ் ஒன்றையும், கருப்பு நிற டி-ஷர்ட் ஒன்றையும் அணிந்து என் மனைவியின் முன் போய் நின்று "எப்படி இருக்குது?" என்று கேட்கத் தலைப்பட்டேன். (அவங்க, 'கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு' கோஷ்டியைச் சேர்ந்தவங்க).

மேலும் கீழுமாக என்னைப் பார்த்துவிட்டு, "ட்ரெஸ் எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனா கழுத்து மேல தான் ஏதோ அசிங்கமா இருக்கு. It spoils the look." என்றாள்.

நான் அவசரமாக கழுத்திலும் கீழ் தாடையிலும் கை வைத்துத் தேய்த்து, "என்னது? இப்ப போயிடுச்சா?" என்றேன்.

அவள் சிரித்து, "உன் முகத்தை சொன்னேன்" என்றாள்.

I love women when they get sweetly naughty!!

7 Comments:

Blogger G.Ragavan said...

வாங்க மீனாக்ஸ். எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.

முக்காப் பேண்ட்டு...நானும் போட்டுக்கிட்டு இருந்தேன். இப்பெல்லாம் முழுப் பேண்டே கெடைக்குது. ரொம்பவும் வசதியாவும் இருக்கு. லுங்கியெல்லாம் இருக்கு. வீட்டுல தூங்கீட்டு இருக்கு.

பெங்களூருல லுங்கி கட்டிக்கிட்டு வீட்டு வாசல்ல கூட நிக்க முடியாதே...அப்புறமெங்க வெளிய தெருவுல போறது. நமக்கெல்லாம் இந்த casual pantsதான் வசதி. மாவு மில் துணி மாதிரி கொஞ்சம் தொளதொளன்னு இருந்தாலும் வசதியாத்தான் இருக்கு.

August 21, 2006 1:34 AM  
Anonymous Anonymous said...

Hi meenaksh,

Which film you went first after your marriage?

August 23, 2006 9:11 PM  
Blogger ரவியா said...

மேல தான் ஏதோ அசிங்கமா இருக்கு. .....சிரித்து, "உன் முகத்தை சொன்னேன்" என்றாள்.

ippovEvaa?? naan ingyEym lungi thaan

August 24, 2006 8:39 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Hi Anonymous, திருமணம் முடிந்து நான் மனைவியுடன் பார்த்த முதல் திரைப்படம் - பாரிஜாதம்

August 27, 2006 9:08 PM  
Blogger Filbert said...

Good narration Meens. I am firmly on your side when you say that lungi is the most comfortable male wear that has ever been designed. Nothing can even come close to it :) Me too, wearing lungi quite often here

September 21, 2006 8:29 AM  
Anonymous Anonymous said...

Just now I read this post...
Good one!!!
Kalakkeetanga unga wife!!
..Aadhi

September 28, 2006 4:09 AM  
Blogger கால்கரி சிவா said...

லுங்கி லுங்கிதான்.இந்தியாவிற்கு வரும்போது ஒரு டஜன் லுங்கி வாங்கி அதை தைத்து எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன்.

தோட்ட வேலை செய்ய கார் துடைக்க ஏற்ற அய்ட்டம் அதுதான்

கால்கரியில் லுங்கி கட்டிக் கொண்டு கார் ஒட்டின ஒரே தமிழன் நானாக தான் இருக்க முடியும்

வாழ்க லுங்கி

October 04, 2006 2:28 PM  

Post a Comment

<< Home