Extreme Harry Potter Fanclub
(எச்சரிக்கை: நீங்கள் என்னைப் போன்ற தீவிரமான Harry Potter ரசிகனாக இல்லாமல் போனால், இந்தப் பதிவு உங்களுக்குப் புரியாமல் போகக் கூடும்.)
நீங்கள் அளவுக்கு அதிகமான Harry Potter ரசிகர் என்பதற்கான அறிகுறிகள் :-)
1. சம்பந்தா சம்பந்தமில்லாமல் லத்தீன் மொழிச் சொற்களை அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
2. உங்களுக்குப் பிடிக்காத ஆசிரியரை 'ஸ்நேப்' என்று பட்டப் பெயர் அளித்து அழைக்கிறீர்கள்
3. உங்கள் கணினியில், 'You've Got mail' என்று செய்தி வந்தால், உடனே வீட்டுக்கு வெளியே ஓடி வானத்தில் ஆந்தை ஏதாவது வருகிறதா என்று கவனிக்கிறீர்கள்
4. இரவு படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குப் போகும்போது வெளிச்சத்திற்கு விளக்கைப் போடாமல், 'Lumos' என்று மந்திரம் சொல்கிறீர்கள்
5. நீங்கள் பார்க்கின்ற ஒவ்வொருவரையும் 'இவர் Gryffindor-ஆ, Hufflepuff-ஆ, Ravenclaw-ஆ, Slytherin-ஆ என்று பாகுபடுத்திப் பார்க்க முனைககிறீர்கள்
6. செண்ட்ரல் ஸ்டேஷனில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் ப்ளாட்பாரங்களுக்கு இடையிலான சுவற்றில் நுழைய முனைந்து மண்டையை உடைத்துக் கொண்டீர்கள்
7. அம்மாவின் சேலைகளை மற்றும் அப்பாவின் வேட்டிகளை எடுத்து உங்கள் மேல் சுற்றி நீங்கள் மாயமாய் மறைந்து போகிறீர்களாவென்று பார்க்க முயற்சி செய்கிறீர்கள்.
8. எழுந்து சென்று ஒரு பொருளை எடுப்பதற்கு முன்னால் 'Accio ரிமோட்' என்று எதற்கும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக் கொள்கிறீர்கள்
9. செஸ் விளையாடும் போது காய்களை உங்கள் கையால் நகர்த்தாமல், தானாக நகரும்படி கட்டளையிட்டுப் பார்க்கிறீர்கள்
10. ஐந்தாம் புத்தகம் ஒரு வழியாகக் கையில் கிடைத்த போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது
11. உங்கள் நண்பர்களெல்லாம் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் Apparating/Disapparating லைசென்ஸ் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
12. உங்கள் பிறந்த தினங்களை விடவும் விமரிசையாக ஹாரி (July 31, 1980), ரான் (March 01, 1980), ஹெர்மையொனி (September 19, 1980) ஆகியோரின் பிறந்த தினங்களைக் கொண்டாடி மகிழ்கிறீர்கள்.
நன்றி: MuggleNet

1 Comments:
எனக்காக எண் 13: வேறு மொழிகள் தெரிந்தப் பட்சத்தில் அம்மொழிகளிலும் ஹார்ரி பாட்டர் புத்தகங்கள் படிப்பீர்கள். பெயர் மாற்றங்களை கண்டுப் பொறுமுவீர்கள். உதாரணம்:
பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் ஹாக்வேர்ட்ஸுக்கு "பூத்லாற்" என்றப் பெயர். ஸ்னேப் "ரோக்" ஆகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment
<< Home